புதுச்சேரி தியாகச்சுவரில் சாவர்கர் படம் எரிப்பு

புதுச்சேரி: நாட்டின் 75வது சுதந்திர தின பெருவிழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் சக்ரா விஷன் இந்தியா அமைப்பு சார்பில் தியாகச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 27ம் தேதி தியாகச்சுவரில் சாவர்கர் பெயர் பலகையை கவர்னர் தமிழிசை பதித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், தியாகச்சுவரில் இருந்து சாவர்கர் பெயர் பலகையை அப்புறப்படுத்த வலியுறுத்தி  சின்ன கடை மணிக்கூண்டு அருகே பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பேரணி புறப்பட்டனர். போராட்டகாரர்கள் சாவர்கர் படத்தையும், தியாகச்சுவரில் கவர்னர், சாவர்கர் பெயர் பலகையில் வைக்க இருந்த படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து, 70க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

Related Stories: