திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் உற்சவங்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 1ம் தேதி ஆண்டாள் திருவாடிபுரம் சாத்துமுறை, மலையப்ப சுவாமி  புரிசைவாரி தோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. 2ம் தேதி கருடபஞ்சமி, ஏழுமலையான் கோயிலில் கருட சேவையும், 6ம் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாவின் ஜெயந்தி உற்சவம், 9ம் தேதி நாராயணகிரியில் சத்ரஸ்தான உற்சவம், 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள்  பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி ஸ்ரவண பவுர்ணமி, ராக்கி பண்டிகை, ஸ்ரீவிகனாச மஹாமுனி ஜெயந்தி, 12ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, மலையப்ப சுவாமி விக்னசாச்சாரியார் சன்னதிக்கு செல்லுதல், 15ம் தேதி சுதந்திர தினம், 19ம் தேதி ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. 20ம் தேதி உறியடி உற்சவம், 29ம் தேதி பலராம ஜெயந்தி, 30ம் தேதி வராஹ ஜெயந்தி, 31ம் தேதி விநாயக சதுர்த்தி உற்சவம் நடைபெற உள்ளது.

Related Stories: