×

இலங்கையில் பணவீக்கம் 60.8 சதவீதமாக உயர்வு

கொழும்பு: இலங்கையின் பணவீக்கம் 60.8 சதவீதமாகவும், உணவு பணவீக்கம் 90.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், 63 லட்சம் மக்கள் உணவின்றி தவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. எரிபொருளுக்காக பல நாட்கள் காத்துக் கிடக்க வேண்டி உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அரசிடம் பணம் இல்லை. இதனால், பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இலங்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபர துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 60.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஜூனில் 54.6 சதவீதமாக இருந்தது. ஜூனில் 80.1 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலையில் 90.9 ஆக உயர்ந்துள்ளது’ கூறப்பட்டுள்ளது.  

* கோத்தபய பணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய கடந்த 9ம் தேதி நாட்டை விட்டு ஓடியபோது, அதிபர் மாளிகை,  அலுவலகத்தை மக்கள் சூறையாடினர். அப்போது, அங்குள்ள பாதாள அறையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் இருந்த பணம் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அந்த பணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.



Tags : Sri Lanka , Inflation in Sri Lanka rises to 60.8 percent
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்