நெதர்லாந்து சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற திருப்புவனம் எஸ்ஐ

திருப்புவனம்: நெதர்லாந்தில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று, திருப்புவனத்தைச் சேர்ந்த போலீஸ் எஸ்ஐ தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் போலீஸ் லயன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(50). தமிழக போலீசின் சிறப்பு இலகு ரக படையில் எஸ்ஐயாக பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தடகள போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். மாரத்தான் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர், சமீப காலமாக நடை போட்டியிலும் அதிகளவில் பங்கேற்று வருகிறார். கடந்த 2019ல் சீனாவில் நடந்த நடை போட்டியில் தங்கம் வென்றார்.

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் நடந்து வரும் சர்வதேச தடகள போட்டியில் இந்தியா சார்பில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், நடை ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வருகிறது. 5 ஆயிரம் மீட்டர் நடை போட்டியில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி, முதலாவதாக வந்து தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கிருஷ்ணமூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டி தெரிவித்துள்ளனர்.

Related Stories: