ஸ்டெர்லைட் நிர்வாகம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை...

தூத்துக்குடி:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பொய் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராட்ட குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாக எழுந்த எதிர்ப்பு மக்களின் தன் எழுச்சி போராட்டத்தால் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க அந்த நிர்வாகம் பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருவதாக போராட்ட குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சில அமைப்புகளை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஆலை நிர்வாகம் ஈடுப்பட்டு வருவதனுடன் சமூக ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கைகளும் நடைபெறுவதாக போராட்ட குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் பொய் பிரச்சாரத்தை தமிழக அரசு தடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று போராட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தமிழக அரசால் இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உள்ளதாக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பப்படுவதை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ளவேண்டும் என்றும், அவர்கள் அப்போது வலியுறுத்தியுள்ளனர்.                                         

Related Stories: