×

நடிகை பலாத்கார வழக்கில் திடீர் பரபரப்பு; என்னை சிக்க வைத்தது நடிகை மஞ்சு வாரியர்.! நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் தன்னுடைய முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியர் தான் தன்னை சிக்க வைத்தார் என்று உச்ச நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது திலீப் நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கில் கொச்சி குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நடிகர் திலீப்பிடம் நடிகையின் பலாத்கார காட்சிகள் இருப்பது உண்மைதான் என்றும், இது தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதாரங்களை அழித்தது தொடர்பாக திலீப் மீது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பது: அரசுத் தரப்பும், போலீசும் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகையும் இந்த வழக்கை தேவையில்லாமல் நீட்டிக்கொண்டு செல்கின்றனர். தனி நீதிமன்ற நீதிபதிக்கு பதவி உயர்வு கிடைத்து வேறு நீதிமன்றத்திற்கு செல்லும் வரை விசாரணையை நீட்ட திட்டமிட்டுள்ளனர்.

எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும். என்னுடைய முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சுவாரியர் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு கேரள காவல்துறையில் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ளார். அவர் மூலம் தான் இருவரும் சேர்ந்து என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். மேலும் மலையாள சினிமா உலகில் என்னுடைய வளர்ச்சியை பிடிக்காத சக்தி வாய்ந்த சிலரும் என்னை சிக்க வைப்பதற்கு ஒரு காரணமாகும். தொடர் விசாரணையில் எனக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு நடிகர் திலீப் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Manchu Warrier ,Tileep ,Supreme Court , Sudden excitement in actress rape case; Actress Manju Varrier trapped me! Actor Dileep petitions Supreme Court
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...