×

சிவகங்கை மாவட்டம் மாரநாடு அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு: முயல் வேட்டைக்கு சென்ற போது நடந்த துயரம்...

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தில் முயல் வேட்டைக்கு சென்ற போது வயலில் காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். விவசாயியான ஐயாக்காளை,  அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் அஜித்குமார் ராணுவத்தில் பணிபுரிகிறார், 2வது  மகன் சுதர்தன பாண்டி காவல் துறையில் பணிபுரிவதற்காக தேர்வெழுதி பதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவர்கள் 3 பேரும் நேற்று இரவு வயலுக்கு செல்வதற்காக அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமம் வயல் வழியாக சென்றுள்ளனர். அப்போது சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முத்துகருப்பு என்பவர் தனது வயலில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக வயலை சுற்றி மின்கம்பிகளை போட்டு, மின்சார இணைப்பை சட்ட விரோதமாக கொடுத்துள்ளார். அதில் தெரியாமல் கால் வைத்த 3 பேர் ஒருவர் பின் ஒருவராக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

நேற்று இரவு வீட்டைவிட்டு வேளியே சென்ற 3 பேரும் வீடு திரும்பாததை கண்டு அவரது உறவினர்கள் தேடி சென்ற போது வயல் வெளியில் இறந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் பழையனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், ராணுவ வீரரான அஜித்குமாருக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. அவர் குழந்தையை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தவர் அடுத்த நாளே இந்த சம்பவம் நிகழ்ந்ததால் கிராமமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காட்டு பன்றிகள் அதிகளவு தொல்லை தருவதால் விவசாயிகள் வேறு வழியின்றி காட்டு பன்றிகளை அளிப்பதற்காக மின் இணைப்பை கொடுத்துள்ளனர். எனவே, காட்டு பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும்  ,கிராமத்து மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Sivagangai district ,Naranadu , Sivaganga, Maranadu, Electricity, Loss of life, Rabbit, Hunting, Distress.
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து