புழல் காவாங்கரை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல்: புழல், காவாங்கரை, பாலாஜி நகர், சக்திவேல் நகர், செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டு சாலை, பாடியநல்லூர் பம்மதுகுளம், அலமாதி, நல்லூர், சோழவரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, இங்குள்ள டீக்கடை, ஓட்டல்கள் முன்பு ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சில நேரங்களில் இந்த தெரு நாய்கள் குழந்தைகள், முதியவர்களை கடித்து விடுகின்றன. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை மற்றும் அரசுக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடித்து கால்நடை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: