காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பாஜவில் இணைந்தார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ராமசுவாமி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று பாஜவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து, பாஜ உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார். பாஜவில் இணைந்துள்ள சஞ்சய் ராமசுவாமி காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1991ம் ஆண்டு விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இவரது தந்தை சென்னை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவரது பாட்டனார் ஜஸ்டிஸ் கே.வீராசுவாமி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: