×

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: ஓபிஎஸ் பேட்டி

சென்னை: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும், வெல்லும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்ப அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். பின்னர் அவர் அளித்த அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் எனது உடல்நலம் எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். நன்றாக இருக்கிறது என்றேன். உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

அதிமுக பொதுக்குழு பற்றிய உங்கள் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அது முடிவு எப்படி இருக்கும். உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்ற கேள்விக்கு, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மமே மீண்டும் வெல்லும், வெல்லும், வெல்லும், வெல்லும் என்று மூன்று முறை கூறினார். நீதிமன்றத்தில் இருதரப்பும் மீண்டும் இணையவாய்ப்பு இல்லை என உங்கள் தரப்பில் கூறியிருக்கிறீர்கள். அது உறுதியானதா என்ற கேள்விக்கு, பதில் எதுவும் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

Tags : Gambling the life of Dharma: OPS interview
× RELATED பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை...