கோவையில் பரபரப்பு; மாணவிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் கைது: சஸ்பெண்ட் செய்து உத்தரவு

கோவை: கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் (56)  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளிக்கு முன்பு குவிந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.இதனையடுத்து மாணைவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்  பிரபாகரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனிடையே மாவட்ட கலெக்டர் சமீரன் பரிந்துரையின்பேரில், மாவட்ட கல்வி அதிகாரி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: