×

பெங்களூரு விமான நிலைய தாக்குதல் நடிகர் விஜய் ேசதுபதி மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெங்களூரூ விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி மைசூர் செல்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றார். அப்போது, நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆனால், வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

 வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது இயந்திரத் தனமானது.

மேலும், உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என்று அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளது. எனவே, விளம்பர நோக்கத்துடன் மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி ெசய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு நேற்று இறுதி உத்தரவுக்காக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப், மகா காந்தியை தாக்கியதாக விஜய் சேதுபதி மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அவதூறு வழக்குக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

Tags : Bengaluru airport ,Vijay Yesadhupathi , Bengaluru airport attack, actor Vijay Sethupathi, case dismissed, high court orders
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...