×

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: ஆக.3ம் தேதி நடக்கிறது

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆக.3ம் தேதி நடக்கிறது. 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, 6ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் ஆக.3ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாநகர போக்குவரத்து கழகத்தின் குரோம்பேட்டை, பயிற்சி மையம் வளாகத்தில் நடக்கிறது.

மேலும், கொரோனா காரணமாக, அரசு அறிவுறுத்தலின்படி சமூக இடைவெளியை பின்பற்ற உள்ளதால், இந்த பேச்சுவார்த்தையில் தங்களது பேரவை, தொழிற்சங்கத்தின் சார்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 14th Wage Contract Negotiation for Transport Workers: Will be held on 3rd August
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...