×

போன் வேணாம் நேர்ல பேசலாம்: பைடன் ஜின்பிங் திட்டம்

வாஷிங்டன்: தைவான் விவகாரம் தொடர்பாக பைடனும், ஜின்பிங்கும் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.அமெரிக்க, சீன தலைவர்கள்  இைடயே  சமீப காலமாக  பல்வேறு பிரச்னைகளால் மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம், தென் சீன கடல் விவகாரம் போன்றவற்றால் பதற்றம் நிலவுகிறது.    

இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜின்பிங்கும் நேற்று போனில் பேசினர். இது 2.30 மணி நேரம் நீடித்தது. அப்போது, உக்ரைன் போர், பெலோசியின் தைவான் பயணம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பின்னர், இது தொடர்பாக நேரில் சந்தித்து பேசுவது பற்றி பரிசீலிக்கலாம் என இரு தலைவர்களும் தெரிவித்தனர். ஆனால், இந்த சந்திப்பு எப்போது, எங்கே நடக்கும் என்று தெரியவில்லை.

Tags : Biden ,Xi Jinping , Biden, Xi Jinping, and the Taiwan issue
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை