×

பாக்.கின் முதல் இந்து பெண் டிஎஸ்பி மனிஷா: தடைகளை தாண்டி சாதனை

கராச்சி: அனைத்து தடைகளையும் முறியடித்து, பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி.யாக மனிஷா ரோபெட்டா பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ஜகோபாபாத் பகுதியை சேர்ந்தவர் மனிஷா ரோபெட்டா (26). இவர் கடந்த ஆண்டு சிந்து அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்பிஎஸ்சி) நடத்திய தேர்வில் 152 வெற்றியாளர்களில் 16வது இடத்தை பிடித்தார். இதன் மூலம், பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி.யாகும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளார். தற்போது பயிற்சியில் உள்ள ரோபெட்டா, பயிற்சி நிறைவு செய்ததும், குற்றங்கள் நிறைந்த லியாரி பகுதியில் டிஎஸ்பி.யாக பதவியேற்க உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறு வயதில் இருந்தே ஆணாதிக்க முறையை பார்த்து வளர்ந்தவள் நான். பெண்கள் படித்து வேலைக்கு செல்வதாக இருந்தால் டாக்டராக வேண்டும் அல்லது ஆசிரியராக வேண்டும் என நினைக்கிறார்கள். குடும்பப் பெண்கள் காவல் துறையில் சேர்வதையோ, நீதிமன்றங்களில் பணிபுரிவதையோ யாரும் விரும்புவதில்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் பெண்களின் பாதுகாவலராக இருந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பேன். போலீசில் என்னால் நிலைக்க முடியாது என உறவினர்கள் கூறினார்கள். அவர்கள் நினைத்தது பொய் என தற்போது நிரூபித்துள்ளேன்’’ என்றார்.

Tags : Manisha ,Pakistan , Pakistani, Hindu female DSP Manisha, feat
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்