மகளிர் டி20 ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா

பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ள மகளிர் டி20ல் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. டாஸ் வென்று பேட் செய்த  இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் 52 ரன் (34 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஷபாலி வர்மா 48 ரன் (33 பந்து, 9 பவுண்டரி), ஸ்மிரிதி மந்தனா 24 ரன் (17 பந்து, 5 பவுண்டரி) விளாசினர். ஆஸி தரப்பில்  ஜெஸ் ஜோனசன் 4, மேகன் ஷூட் 2, பிரவுன் 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய ஆஸி. ரேணுகா சிங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 7.2 ஓவரில் 49 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும், ஆஷ்லி கார்டனர் 52* ரன் (35 பந்து, 9 பவுண்டரி), கிரேஸ் ஹாரிஸ் 37 ரன் (20 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), அலானா கிங் 18* ரன் (16பந்து, 3பவுண்டரி) விளாச, ஆஸி. 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய தரப்பில்  ரேணுகா சிங் 4, தீப்தி சர்மா 2, மேக்னா சிங் 1 விக்கெட் எடுத்தனர்.

முதல் ஆட்டத்தில்  உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா அடுத்து 2வது ஆட்டத்தில்  நாளை  பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்கிறது

Related Stories: