காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

பிர்மிங்காம்: காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரின் அதிரடியில் ஆஸ்திரேலிய அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. போட்டிகள் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக மகளிர் கிரிக்கெட் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கற்றுள்ளனர்.

இதையடுத்து இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்து.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும், ஷஃபாலி வர்மா 48 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  ஸ்மிருதி மந்தனா 24 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 6 விக்கெட்டுகள் மீதம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி போராடி வருகிறது.

இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

Related Stories: