×

வருமான வரி கணக்கை நாளை மறுநாளுக்குள் தாக்கல் செய்யவில்லையேனில் அபராதம்: வருமான வரித்துறை

சென்னை: வருமான வரி கணக்கை நாளை மறுநாளுக்குள் தாக்கல் செய்யவில்லையேனில் ரூ.5000 அபராதம் செலுத்த நேரிடும் என்கின்றனர் பட்டயகணக்காளர்கள். வங்கிக் கணக்கின் வழியாக மாதச் சம்பளம் பெறுவோரும், வருவாய் ஈட்டுவோரும்  ஆண்டுக்கு ஒருமுறை வருமானவரித்துறைக்கு வருமானம் பற்றிய விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கான விவரங்களை அதே ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறையாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல் இருந்தால் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு வரி எதுவும் இல்லை. ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகமான வருமானத்திலிருந்து வரி விதிக்கப்படுகிறது. ஒருவர் முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்து விட்டால் அதற்கு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் 2021,2022- ம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சமர்ப்பிக்க படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வருமான வரித்துறை வரிச் செலுத்துவோருக்கு இது தொடர்பான  செல்போன் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலை அனுப்புகிறது.

ஜூலை 26-ம் தேதி வரை ரூ.3.4. கோடிக்கும் அதிகமானோர் வரிதாக்கல் செய்துள்ளனர். 26 -ம் தேதி மட்டும் ரூ.30 லட்சம் வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமான வரிக்கணக்கிற்கு ரூ.1000 அபராதமும் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக வருமான வரிக்கணக்கிற்கு ரூ,5000 அபராதமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

Tags : Income Tax Dept. , Penalty for not filing income tax returns by day after tomorrow: Income Tax Dept
× RELATED வருமான வரி கணக்கை நாளை மறுநாளுக்குள்...