×

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தமிழகத்துக்கு 3வது இடம்: தொழிற்பொருட்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு..!!

காஞ்சிபுரம்: நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் தமிழகத்துக்கு 3வது இடம் உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழிற்பொருட்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர்,  திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் 360-க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்பேட்டையை சுற்றி உள்ள 600-க்கும்  மேற்பட்ட பெருநிறுவனங்களுக்கும், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தங்கள்  தயாரிப்புகளை வினியோகித்து வருகின்றனர்.

இந்த வணிகத்தை மேலும் மேம்படுத்தவும் புதிய நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளவும் இந்த பொருட்காட்சி பெரிதும் உதவும். திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தால் 2-வது முறையாக நடத்தப்படும் TEXPO - 2022  தொழிற் பொருட்காட்சியை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொழிற் பொருட்காட்சியில் 130-க்கும் மேற்பட்ட  குறு, சிறு நிறுவனங்கள் பங்குபெற்று, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர். இந்தத் தொழிற் பொருட்காட்சியில் 2000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்கள் வணிகங்களை மேம்படுத்திக்கொள்ள, உதவியாக அமையும் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பொருட்காட்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1970-ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, குறு, சிறு, நடுத்தர தொழில்புரிவோருக்காக சிட்கோ தொழிற்பேட்டைகளை உருவாக்கினார்.இன்று தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 347 தொழில் மனைகளுடன் 127 தொழிற்பேட்டைகள்இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் நபர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 27.06.2022 அன்று ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 254.95 ஏக்கர் பரப்பளவில்654 மனைகளுடன்5 புதிய தொழிற்பேட்டைகள்தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, செங்கல்பட்டு மாவட்டம் - ஆலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம்-பெரியகோளப்பாடி, சேலம் மாவட்டம் - பெரிய சீரகபாடி, நாமக்கல் மாவட்டம் - இராசம்பாளையம், புதுக்கோட்டை மாவட்டம்- ஆலங்குடிசெங்கல்பட்டு மாவட்டம், தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது வசதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.  

2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 402 ஏக்கர் பரப்பளவில், ரூ.218 கோடி மதிப்பீட்டில்,செங்கல்பட்டு மாவட்டம் - கொடூர், மதுரை மாவட்டம் - சக்கிமங்கலம்,திருச்சி மாவட்டம் - மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் - காவேரிராஜபுரம், ஆகிய 4 புதிய தொழிற்பேட்டைகள் அறிவிக்கப்பட்டன. இந்த தொழிற்பேட்டைகளுக்கான பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. வெகுவிரைவில் தொழில் மனைகள் தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்படும்.  நடப்பு நிதி நிலை அறிக்கையில் ரூ.41 கோடியே 50 லட்சம்     செலவில் கடலூர் மாவட்டம் - கடாம்புலியூர், மதவேடுஆகிய இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டியிலும், 2 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ஒரு தனியார் தொழிற்பேட்டை  அறிவிக்கப்பட்டு நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் நில வழிகாட்டி மதிப்பு டர்ந்து உயர்த்தப்பட்டது  அதன் காரணமாக ழில்மனைகள் அதிக விலையால் 122 தொழிற்பேட்டைகளில் 371 ஏக்கர் பரப்பளவில் 1341 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது தொழில் மனைகளின் விலை 5% முதல் 75% வரை குறைக்கப்பட்டதால் இது வரை 855 தொழில் மனைகள் ஒதுக்க்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிட்கோ மூலம் வளர்ந்து வரும் தொழில் துறைகளான மருந்து, துல்லியமான உற்பத்தி, பாதுகாப்பு  விண்வெளிஸ்மார்ட் போக்குவரத்து ஆகிய துறைகளுக்குபெருங்குழுமங்கள் - Mega Clusters தலா ரூபாய் 100 கோடி மதிப்பில் பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.47 கோடியே 61 லட்சம் மதிப்பில் துல்லிய  உற்பத்தி  பெருங்குழுமம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, முதல் தவணையாக ரூ.13 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திண்டிவனத்தில்,ரூ.155 கோடி மதிப்பீட்டில் மருந்தியல் பெருங்குழுமம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, முதல் தவணையாக ரூ.20 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில், தமிழ்நாடு சிட்கோதொழிற்பேட்டைகளில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் சீர்கெட்டு இருந்தது.

கழக அரசு பொறுப்பேற்றவுடன், முதல்கட்டமாக 78 தொழிற்பேட்டைகளில் ரூ.14 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் செப்பனிடுதல், மழைநீர் வடிகால் சீர் செய்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்,மின் விளக்குகள் அமைத்தல், சாலையோர புதர் செடிகளை அகற்றுதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சலைகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் நுழைவுவாயில் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் நடப்பு ஆண்டில் ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் சீர் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக உள்ள  குறுந்தொழில் நிறுவன குழுமங்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீட்டில்  “குறு நிறுவனக் குழும மேம்பாட்டுத்   திட்டத்தின் கீழ்“ 20 குறு நிறுவன குழுமங்கள் இந்த ஆண்டு நிறுவ நடவடிக்கைகளை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் சாலை வசதி என்பதுமிகவும் அவசியமானது.இதற்காக மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ. 5 ஆயிரத்து 770 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலையும், ரூ.4 ஆயிரத்து 78 கோடி மதிப்பீட்டில் சென்னை வெளிவட்ட சுற்று சாலை, சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. முதல்வர், தொழில்முனைவோர்கள் புதிய தொழில் துவங்க  சொத்து பிணையில்லா வங்கிக் கடன் பெற ரூ. 100 கோடி நிதி ஒதுக்கி “தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டத்தை” அறிவித்து உள்ளார்கள். MSME நிறுவனங்கள் பெறும்வங்கிக் கடனுக்கு 90 சதவீதம் வரைகடன் உத்திரவாதத்தினை தமிழக அரசே வழங்கும்.

மேலும் இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்திரவாதம் வழங்கவுள்ள  ஓரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றுகாலத்தில் MSME நிறுவனங்களுக்கு முதலிட்டு மானியம்,பின்முனை வட்டி மானியமாக2,784 நிறுவனங்களுக்கு ரூ. 169 கோடியே 44 லட்சம்ஒரே தவணையாக வழங்கப்பட்டது.கடந்த நிதியாண்டில் மட்டும்3,545 நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியமாக இதுவரை இல்லாத வகையில் ரூ.360 கோடி மானியமாக வழங்கப்பட்டது. MSME நிறுவனங்களுக்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்துவதற்கு டிசம்பர் 2022 வரை நீட்டித்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.பதிவு கட்டணம் 1% -லிருந்து, இதுவரை இல்லாத அளவில் 0.1% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள  தொழில் மனைகளுக்கு  மனைத் தொகை, தவணைத் தொகை  வாடகை செலுத்த கால அவகாசம் 6 மாதம் நீட்டித்து வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களை மீட்டெடுக்க, முனைவர் என்.சுந்தரதேவன் இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.அக்குழுவும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் தனது அறிக்கையினை 16.03.2022 அன்று சமர்ப்பித்துள்ளது.
 தமிழக முதலமைச்சர் இப்பரிந்துரைகளை ஆராய்ந்து  தக்க நடவடிக்கைகளை   மேற்கொண்டு வருகிறார். நமது தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றமதி செய்ய ஏதுவாக தமிழக முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாட்டில்திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய இடங்களில் 10 புதிய ஏற்றுமதி மையங்கள் அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு உலகில் எந்தெந்த பகுதியில் சந்தை வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்வதுடன், ஏற்றுமதிக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களும் இந்த மையங்களால்  வழங்கப்படும். MSME நிறுவனங்கள் மீது எப்போதும் தனி கவனம் செலுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் MSME நிறுவனங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு” ஒன்றிணையும் வெளியிட்டு உள்ளார்கள்.இதனை செயல்படுத்தும் விதமாகவெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் மூலம்மாவட்டத் தொழில் மைய உதவி பொறியாளர்களுக்கு ஏற்றுமதி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் கழக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில்,  மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி MSME நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரூ. 240 கோடி முதலீட்டில்  ஆயிரத்து 545 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்10 ஏற்றுமதி சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிறுவனங்களின் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் ஒன்றிய நிதி மற்றும் வர்த்தக துறை அமைச்சர்தலைமையில்  நடைபெற்ற ஏற்றுமதியாளர்களுடான கலந்தாய்வுக் கூட்டத்தில்கலந்து கொண்டேன். இக்கூட்டத்தில், இந்தியாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)  ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகள் ஏற்படுத்தி கொண்ட பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள் குறித்து விளக்கப்பட்டது.  

இதில்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) உடனான ஒப்பந்தத்தின்படிநமது மொத்த ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 90% பொருட்களுக்கு  உடனடியாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா  உடனான ஒப்பந்தத்தின்படி 98% பொருட்களுக்கு முழுவதும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோன பொருந்தொற்றுக்கு பிறகு  தமிழ்நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு 2021-22 ஆம் ஆண்டில் ரூபாய் 11 ஆயிரம் கோடி   மதிப்புடைய பொருட்களும், ஆஸ்திரேலியாவிற்குரூபாய் 2 ஆயிரத்து 700 கோடிமதிப்புடைய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, MSME ஏற்றுமதியாளர்கள்  புதிதாக உருவாகியுள்ள  இதுபோன்ற வாய்ப்புக்களை   பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

முதல்வரின் “ஒரு ட்ரிலியன் டாலர் பொருளாதாரம்” எனும் இலக்கினை அடைவதில் பெரு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் MSME  நிறுவனங்களின் வளர்ச்சியும் க்கியமானதாகும். MSME துறையின் மூலம் 3 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் இதுவரை இல்லாத வகையில், ரூ.275 கோடியே 35 லட்சம் மானியத்துடன்ரூ. ஆயிரத்து 101 கோடியே 84 இலட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு 8,586 படித்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன்,பெரும் தொழிற்சாலைகளுக்கு  துணையாக இருந்து நாட்டின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் பெரும் துணை புரிந்து வருகிறது.

மேலும்  நமது நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக MSME துறை விளங்குகிறது.  இது போல், பல்வேறு திட்டங்கள் கழக அரசால் MSME நிறுவனங்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. புதிய தொழில் முனைவோர்களான ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்களுக்கும், சிறு தொழில் முனைவோர்களுக்கும், MSME நிறுவனங்களுக்கும், எப்பொழுதும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு என்றும் துணை நிற்கும் எனக் கூறி விடை பெறுகின்றேன்.நன்றி. வணக்கம்.  நாட்டின் ஒட்டுமொத்த  ஏற்றுமதியில்  தமிழகம் 3- வது இடத்தில் உள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதி ஆண்டில்ரூ. 2.21 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் ஏற்றுமதி 2020-2021 -ஆம் நிதி ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ரூ.1.92 லட்சம் கோடியானஏற்றுமதி சரிந்து 2021-22- ஆதி நிதி ஆண்டில் தி.மு.க ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ரூ.2.62 லட்சம் கோடியாக ஏற்றுமதி அதிகரித்து மத்திய தொழில் துறை அமைச்சகம் வெளிட்டுள்ள பட்டியலில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் ரூ. 3 ஆயிரத்து 340 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்துமுதலிடம் பெற்றுள்ளது.

திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் தொழிற் பொருட்காட்சி தொடக்க விழாவில் தலைமை உரை ஆற்றிய MSME துறை, அரசு செயலர்  திரு.அருண்ராய், இ.ஆ.ப. , முன்னிலை உரை ஆற்றிய  மிழ்நாடு சிட்கோ மேலாண்மை இயக்குநர்  திரு.ஆனந்த், இ.ஆ.ப.,  வரவேற்புரை ஆற்றிய டெக்ஸ்போ - 2022 தலைவர்   திரு.சாரி  வாழ்த்துரை வழங்கிய திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வப்பெருந்தகை, டான்ஸ்டியா தலைவர் திரு.மாரியப்பன்,  திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர்  திரு.ரமேஷ் கண்ணா, டெக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர்  திரு.அரிராஜன், தொழில் அதிபர்களே, தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Labour Exhibition , Minister for Country, Production, Tamil Nadu, Mr. Mo. Anparasan
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...