ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை!: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு..!!

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜம்முவில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஜம்மு - காஷ்மீர் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை, மின்னலுடன் ஓரளவு பரவலான பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories: