குருகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளை கடத்தியவர்கள் கைது

சண்டிகர்: ஹரியானாவில் கால்நடைக்கடத்தலில் ஈடுப்பட்ட லாரியை காவல் துறையினர் சினிமா பானியில் துரத்திச் சென்று மடக்கி 4 பேரை கைது செய்தனர். குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துரத்தல் காட்சி சினிமா படப்பிடிப்பை மிஞ்சும் வகையில் இருந்தது.

சோதனைச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற லாரியில் பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கடத்தப்படுவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து ஜீப்பில் காவல் துறையினர் துரத்தி சென்றனர். கொட்டும் மழையிலும் லாரியை நிறுத்தாமல் கடத்தல்காரர்கள் வேகம் எடுத்ததால் லாரி டயரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து வாகனங்கள் சென்று கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் லாரிக்குள் இருந்து கடத்தல்காரர்கள் வெளியே குதித்து தப்ப முயன்றனர். டயர் பஞ்சரானதால் லாரி வட்டமடித்து நிற்க சுற்றி வளைத்த காவல் துறையினர் துப்பாக்கி முனையில் 4 பேரை கைது செய்தனர். 

Related Stories: