மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குனியாமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது

கோவை: பாலியல் தொல்லை புகாரில் குனியாமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை  குனியாமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் அரசு பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக  பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியும், பாலியல் ரீதியான தொந்தரவளித்தும் வந்துள்ளார். இது குறித்து மாணவிகளின் பெற்றோர் அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், புகாருக்குள்ளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுகுணாபுரம் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: