போதிய மழை இல்லாததால் ரேலியா அணை நீர் மட்டம் குறைந்தது

குன்னூர் :  குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளதால் ரேலியா அணை நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. குன்னூர் அருகே 43.5 அடி கொள்ளளவு கொண்ட ரேலியா அணை உள்ளது. இந்த அணையில் இருந்து குன்னூர் நகரின் உள்ள குடியிருப்பு  பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வறட்சி காலங்களில் தண்ணீர் அளவு 10 அடிக்கும் குறைவாகவே இருந்தது.

இதனால், மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ., தொலைவில் உள்ள நீரோடைகளில் இருந்து தலைச்சுமையாகவும், வாகனங்கள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர்.இந் நிலையில், குன்னூர் பகுதியில் தெற்மேற்கு மழை குறைவு காரணமாக அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக உதகை, கூடலூர் போன்ற பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வரும் சூழ்நிலையில் குன்னூரில் மழையின் அளவு குறைந்தது. இதனால், ரேலியா அணையின் நீர் மட்டம் படிபடியாக குறைந்து தற்போது 35 அடியாக உள்ளது. இதனால் குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Related Stories: