மத்தியபிரதேசத்தில் ஒரே ‘சிரிஞ்ச்’-ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர் கைது!

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தின் சாகர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே ‘சிரிஞ்ச்’-ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தியும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று, மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 15 வயதிற்கு மேற்பட்ட 39 மாணவர்களுக்கு ஒரே ‘சிரிஞ்ச்’-ன் மூலம் தடுப்பூசி செலுத்தியதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து  நேற்று, தடுப்பூசி செலுத்திய  ஜிதேந்திர பள்ளியில் இருந்து தலைமறைவானார். இதனை தொடர்ந்து பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஜிதேந்திர மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவான ஜிதேந்திராவை போலீசார் 336-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.    

இந்நிலையில் ஜிதேந்திராவை கைது செய்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தடுப்பூசிக்கான பொருள்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்ததாகவும் அதனால் அதை வைத்தே அனைவருக்கும் செலுத்தியதாகவும் பதிலளித்தார்.

இதையடுத்து 39 மாணவர்களையும் சுகரத்துறை சார்பில் பரிசோதிக்கப்பட்டதில் அனைவரும் தற்போது வரை நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: