இந்தியாவில் 44% மாவட்டங்களில் 18 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகளுக்கு திருமணம் :ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி : இந்தியாவில் 44% மாவட்டங்களில் 18 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் வழக்கம் இன்னும் அதிகமாக இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. குடும்பக்கட்டுப்பாடு திட்ட இலக்கு 2030-க்கான ஆவணத்தை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 118 மாவட்டங்களில் பெண்கள் பதின்ம வயதில் கர்ப்பமாதல் மிக அதிகமாக இருப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

பீகாரில் 19 மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் 15 மாவட்டங்களிலும் அசாமில் 13 மாவட்டங்களிலும் மராட்டியத்தில் 13 மாவட்டங்களிலும் ஜார்கண்டில் 10 மாவட்டங்களிலும் ஆந்திராவில் 7 மாவட்டங்களிலும் திரிபுராவில் 4 மாவட்டங்களிலும் பதின்ம வயதில் பெண்கள் கர்ப்பம் அடைதல் மிக அதிகமாக உள்ளது.

18 வயதிற்கு முன்பாக திருமணங்கள் அதிகம் நடப்பதே பதின்ம வயதில் பெண்கள் கர்ப்பம் அடைய காரணமாக உள்ளது. இந்தியாவில் 44% அதிகமான மாவட்டங்களில் 18 வயதுக்கு முன்பாக பெண்களுக்கு அதிகளவில் திருமணம் நடைபெறுவதாகவும் இந்த ஆவண அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் நவீன கருத்தடை வசதிகளை பயன்படுத்துவதும் மிகக் குறைவாகவே உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

Related Stories: