பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான் :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை : பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை.யின் கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் 42வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார்.தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடப்பது முதல்முறையாகும்.செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி. உயர்கல்வியில் தமிழ்நாடு மிகச்சிறப்பான இடத்தில் உள்ளது.

உயிர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை மத்திய அரசின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. என்ஐஆர்எப் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.  பேரறிஞர் அண்ணா பட்டம் பெற்றவர்களை தான் நாட்டின் திருவிளக்கு என்றார்.பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான். மாணவர்கள் பெறக்கூடிய பட்டம், அவர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் தான். நாட்டைச் செழிக்க செய்யக்கூடிய வல்லுநர்கள் மாணவர்கள் தான்.அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் கையால் பட்டம் பெறுவது பெருமைமிகு தருணம் ஆகும்.

பண்டைக்காலம் தொட்டு தமிழர்கள் எப்போதும் தொழில்துறையில் சிறந்து விளங்குகின்றனர்.கடல் வணிகம், கடற்படை, இரும்பு வார்ப்புத் தொழில், கல்லணை, தஞ்சை பெரிய கோயிலை உருவாக்கியவர்கள்.கல்வி என்பது தான் யாராலும் திருட முடியாத பறிக்க முடியாத சொத்து. அனைவரும் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை ஆகும்.இடைநிற்றல் இன்றி, அனைவருக்கும் தடையற்ற கல்வி என்பதே எங்களது இலக்கு.7.5% ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. படித்து பட்டம் பெறுவோருக்கு வேலைவாய்ப்பு பெறும் சூழலை உருவாக்கி வருகிறோம். கையில் பட்டத்துடனும் கண்களின் கனவுகளுடனும் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள், என்றார்.

Related Stories: