இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடக்கம்!

டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்க உள்ளது. ரோஹித் ஷர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணி மேலும் வலுவடைந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பாண்டியா ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்க உள்ளது. இதில் ஓய்வளிக்கப்பட்ட முன்னணி வீரர்களான ரிஷப் பண்ட், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் களமிறங்க உள்ளனர். தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இந்த தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடரை போலவே டி20 தொடிரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குவதால் ஆட்டத்தில் இன்று அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப்போட்டி டிரினிடாட் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.

Related Stories: