×

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும்: அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு..!!

சென்னை:  தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலை.யின் கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் 42வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். விழாவில் தலைமை உரையாற்றி பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறார். பல்கலை. வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

பிரதமர் வருகையை ஒட்டி அண்ணா பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசாக வழங்கினார். பின்னர் விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், நான் முதல்வன் திட்டம் மூலமாக பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் செய்திருக்கிறார். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்போரின் தமிழ்நாடு தான் முதலிடம் பெற்றுள்ளது. 53 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்கின்றனர். உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. உயர்கல்வி படிப்பில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம். 56.5 சதவீதம் பெண்கள் உயர்கல்வி பயில்கின்றனர்.

பொறியியல் பட்டம் பெறுபவர்கள் சிறு சிறு தொழில்களை உருவாக்கி தொழில் முறைவோராக வேண்டும். உயர்கல்வித்துறையுடன் வேறு சில துறைகளை இணைத்து நான் முதலான திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்துகிறார். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Tags : PM Modi ,Tamil Nadu ,Anna ,University ,Minister ,Ponmudi , Tamil Nadu, Education Development, Prime Minister Modi, Anna University, Minister Ponmudi
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...