விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை :விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் இயங்காது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக சில பள்ளிகள் மீது புகார் எழுந்தது.    

இதையடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

Related Stories: