குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. வாழ்த்து :வீரமங்கை ராணி வேலுநாச்சியார் படத்தை வழங்கினார்!!

டெல்லி :டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார். திரவுபதி முர்மு கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார்.இதைத் தொடர்ந்து திரவுபதி முர்முவை நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி சென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. இன்று காலை திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் திருமதி.திரவுபதி முர்மு ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை நினைவு பரிசாக வழங்கினேன், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: