×

ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் மிக்- 21 போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலி : அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!!

டெல்லி: ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் மிக்- 21 போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 பயிற்சி விமானம் நேற்று மாலை ராஜஸ்தானில் உள்ள உதர்லாய் விமான தளத்திலிருந்து பயிற்சிக்காகப் புறப்பட்டது. இந்த ஜெட் விமானத்தில் விமானிகள் இருவர் நேற்று வழக்கம் போல பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அந்த விமானம் இரவு 9:10 மணியளவில் பார்மர் என்ற பகுதிக்கு சென்றபோது,  திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. நிலத்தில் விழுந்து நொறுங்கியதால் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. பல மணி நேரம் பற்றி எறிந்த தீயை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளூர் வாசிகள் திணறினர்.

கட்டுக்கடங்காமல் பற்றி எறிந்த தீயால் அந்த பகுதியே புகை மண்டலம் ஆனது. இந்த விபத்தில் இரு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் தகவலை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. ட்விட்டரில் இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், விபத்தில் விமானிகள் உயிரிழந்தது பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக விமானப்படை நிற்கும். விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மிக்-21 விமான விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌதரியிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். விபத்தில் உயிரிழந்தோருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.


Tags : Rajasthan ,Barmer district ,Minister ,Rajnath Singh , Rajasthan, Parmar, MiG-21, War, Aircraft, Minister, Rajnath Singh
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்