குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து :காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் முர்முவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதை கண்டித்து, நேற்று முன்தினம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள், ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். அப்போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது பற்றி மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், ‘ராஷ்டிரபதி (ஜனாதிபதி) என்பதற்கு பதிலாக ராஷ்டிரபத்தினி’ என கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜ அமளியில் ஈடுபட்டது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: