ரவுடிக்கு 204 நாள் சிறை

பெரம்பூர்: கொடுங்கையூர், தென்றல் நகர், 4வது தெருவை சேர்ந்த ரவுடி  கருணாகரன் (36). கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனை சந்தித்து, ‘‘இனிமேல் நான் குற்ற செயல்கள் ஈடுபட மாட்டேன்’ என்று நன்னடத்தை பிணைப் பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், அதை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில்  உள்ள ஒரு பாஸ்புட் கடையில் தகராறு செய்து கடைக்காரரை தாக்கியதாக கருணாகரன் கைது செய்யப்பட்டார். இதனால் கருணாகரனை 204 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

Related Stories: