கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா நியமனம்

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை நியமிப்பதற்கான உத்தரவை தமிழக கவர்னர் உத்தரவின்பேரில், தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். விரைவில் கூட்டுறவுத்துறை சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: