×

முதல் முறையாக ஒரே ஆண்டில் பேஸ்புக் வருமானம் ரூ.30,000 கோடி சரிவு: டிக்டாக் போட்டியால் பாதிப்பு

வாஷிங்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற புகழ் பெற்ற சமூக வலைதளங்களின் தாய் நிறுவனம் மெட்டா. இது தனது தொழில் வரலாற்றில் முதன் முறையாக 36 சதவீத வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. சீனாவின் டிக்டாக் போட்டி அதிகரிப்பு, விளம்பர வருமானம் குறைவு போன்றவற்றால், அதற்கு இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மெட்டாவின் வருவாய் குறைந்த செய்தி வெளியானதும், அதன் பங்குகளின் விலை ஒரு சதவீதம் சரிந்தது.

ஆனால், கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் தனது 2வது காலாண்டு வருவாய் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்துக்கு கடந்த ஏப்ரல் - ஜூன் வரையிலான 2வது காலாண்டில், அதன் வருவாய் 36 சதவீதம் சரிந்து, ரூ.53,305  கோடி   கிடைத்தது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில்  இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.82,787  கோடியாக இருந்தது. இது பற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில் ‘பொருளாதார மந்தநிலைக்குள் இருக்கிறோம்.

அதனால்தான், விளம்பர வருவாயில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது,’ எனத் தெரிவித்தார். ஸ்னாப், டிவிட்டர் நிறுவனங்களும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இலக்குகளை அடைய முடியவில்லை. விளம்பரச் சந்தை எப்போதும் இல்லாத அளவு மந்தமாக இருப்பதே, வர்த்தகம் குறைந்துள்ளதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Tags : Facebook ,TikTok , Facebook income, TikTok competition, vulnerability
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...