வருமானத்தை மீறி பல கோடி சொத்து குவிப்பு மாஜி அமைச்சர் உதயகுமார் மீது புகார் கூறியவரிடம் விசாரணை

மதுரை: மதுரை, ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் வக்கீல் தினேஷ். இவர் கடந்த 12ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பிய புகாரில் ‘‘2016-2021ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த உதயகுமார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல கோடி சொத்து வாங்கி குவித்துள்ளார். இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், புகார்தாரரான வக்கீல் தினேஷ், மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் வந்து பல்வேறு விளக்கங்களை போலீசாரிடம் நேற்று தெரிவித்தார். அவர் புகாரில் குறிப்பிட்டுள்ள குற்றங்களின் பேரிலான ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி, விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: