இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு உக்ரைன் விருப்பம்

புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள், போர் அவசர காலத்தில் வெளியேறி வந்தவர்களின் நிலை என்ன? இந்திய பல்கலைக் கழகங்களில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு படிப்புகளை நடத்த ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா?’ என மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், ‘உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் படிப்பு விவகாரத்தில் அந்நாட்டு கல்வி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. தற்போது, ஆன்லைனில் வகுப்பு நடத்த உக்ரைன் அரசு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது,’ என தெரிவித்தார்.

Related Stories: