×

திருப்பதியில் 9 நாள் பிரமோற்சவம் இலவசத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: விரைவு, விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு: பிரமோற்சவத்தின் முதல் நாளில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பார். கருட சேவை 1ம் தேதி நடைபெறும். அன்று புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை என்பதால் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். எனவே, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை ரூ.300 விரைவு தரிசனம், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், விஐபி தரிசனம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது. இந்த 9 நாட்களும் இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி வீதியுலாவை காண அனைவரையும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pramotsavam ,Tirupati , 9-Day Pramotsavam in Tirupati Only Allowed Devotees Free: Hurry, Cancel VIP Darshan
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...