இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள்: ஒன்றிய அமைச்சர் கட்கரி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் விரைவில் ‘ஸ்கை பஸ்கள்’ எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, `` டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருவதால், ‘ஸ்கை பஸ்’ எனப்படும் பறக்கும் பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த பேருந்து மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிமீ வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். இவற்றில் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் பயன்படுத்தப்பட உள்ளது,’ என்று தெரிவித்தார்.

Related Stories: