எடப்பாடி அணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: கடந்த 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் தொட்டுள்ள நிலையில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கி இருந்தது.

இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.இதையடுத்து மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரிக்க உள்ளது.இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் அதிமுக தலைமை சார்பில் எஸ்.பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: