×

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி புகைப்படங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி புகைப்படங்கள் இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. அதனால், பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் மூலம் விளம்பர பலகைகளில் ஒட்டபட்டது. இந்த நிலையில், செஸ் விளம்பரத்தில், மோடியின் புகைப்படம் இடம்பெறாதது குறித்து சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமை மிக்கது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்கும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். ஜனாதிபதி, பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் விளம்பரங்களில் புகைப்படம் இடம்பெற்று இருக்கலாமே என்று நீதிபதி கேள்வி எழுப்பியுனார். மேலும் இது தொடர்பாக அரசு தரப்பில் இன்றைய நாளிதழில் கூட செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம் வெளியிடப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், மோடியின் படம் பெறாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற மனுதாரரின் கருத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் தீர்ப்பை மதுரை ஐகோர்ட்டு ஒத்தி வைத்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வில் அளித்துள்ள தீர்ப்பில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதியில் புகைப்படங்கள் இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியது.

மேலும், விளம்பரப்படங்களில் ஜனாதிபதி மற்று பிரதமரின் படங்கள் சேதப்படுத்தப்பட்டால், அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தி அழியா முத்திரையை பெற்றுத்தர வேண்டும் என்றும், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதே ஒருங்கிணைப்பாளர்களின் சிறந்த மன்னிப்பாக அமையும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Tags : PM ,Modi ,President ,Chess Olympiad tournament ,iCort , Ensure PM Modi, President photographs in advertisement of Chess Olympiad; Court Branch Order
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...