மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச்ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அதிர்ச்சி தகவல்!

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தின் சாகர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒரே சிரிஞ்ச்-ன் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திர அஹிர்வார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று பள்ளியில் நடந்துள்ளது. மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது சிரிஞ்ச்-ஐ மாற்றாமல் தடுப்பூசி செலுத்தியதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 39 மாணவர்களும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் 9 முதல் 12ம் வகுப்பு படித்து வருபவர்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நடந்ததை அடுத்து தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திர பள்ளியில் இருந்து தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஜிதேந்திர மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சட்டப்பிரிவு 336-ன் கீழ் ஜிதேந்திர மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியின் விசாரணையில் பேரில் தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திர மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 39 மாணவர்களையும் சுகரத்துறை சார்பில் பரிசோதிக்கப்பட்டதில் அனைவரும் தற்போது வரை நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: