இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி: 246 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி

கொழும்பு: இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியிருந்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 147 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 360 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி தரப்பில் தனஞ்ஜெய டி சில்வா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 508 ரன்கள் என்ற கடின இலக்கை வெற்றி இலக்காக இலங்கை அந்த நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 261 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் தொடரையும் சமன் செய்தது.

Related Stories: