கொடைக்கானலில் தூண்பாறையை மறைத்து கட்டும் ராட்சத சுவரை அகற்றவேண்டும்: வனத்துறைக்கு சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து எழுப்பப்படும் ராட்சத சுவரை அகற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் இயற்கை எழில் கொஞ்சும் தூண் பாறையை பார்வையிடவே சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புவர். மேகங்கள் தவழும் இரண்டு தூண்களை கண்டு ரசித்து, புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் திரண்டு நிற்கும். தற்போது தூண் பாறையை சாலையில் இருந்து பார்க்க முடியாத அளவிற்கு ராட்சத சுவர் ஒன்றை வனத்துறை கட்டி வருகிறது.

இந்த சுவர் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டால் தூண் பாறை முழுவதுமாகவே மறைக்கப்படும். பின்னர் வனத்துறையிடம் டிக்கெட் பெற்று உள்ளே சென்றுதான் தூண் பாறையை பார்க்க முடியும். எனவே ராட்சத சுவரை உடனடியாக இடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் ராட்சத சுவரை அகற்றவும் வனத்துறைக்கு கண்டனங்கள் தெரிவித்தும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

Related Stories: