×

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: மாநிலங்களவை சபாநாயகர் அறிவிப்பு...

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றன. சுசில்குமார், குப்தா சந்தீப்குமார் உள்பட மூன்று உறுப்பினர்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றன. மாநிலங்களவை இன்று காலை துவங்கியவுடன் அவையில் அமலளி ஏற்பட்டது. எதிர் காட்சிகளை பொறுத்தவரை விளைவாசி உயர்வு, எம்.பி.கள் மீதான தக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதற்கான உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுப்பட்டார்கள். இந்நிலையில், ஆளும் கட்சி இருக்கின்ற அவையில் அமளி ஏற்பட்டது. குறிப்பாக அவையில் இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு குறித்த காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன்  சௌத்ரியின் கருத்துக்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, அவை கூடிய பிறகும் மீண்டும் இதே பிரச்சனைகளை முன்வைத்து ஆளும் கட்சி ஒருபுறமும், எதிர் கட்சி ஒருபுறமும் அமளியில் ஈடுப்பட்டார்கள்.

அப்போது, இன்று காலை அவையின் மைய பகுதிக்கு சென்று அவை தலைவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பிய 3 மாநிலங்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முரளிதரன் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள், குறிப்பாக சுசில்குமார், குப்தா சந்தீப்குமார், சுயேச்சை உறிப்பனரான அஜித்குமார் போன் என்ற உறுப்பினர்களையும் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவில் நாராயணசிங் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். விதி எண் 256ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, 20 எம்.பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூழ்நிலையில் தற்போது மேலும் 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மொத்தம் 23 உறுப்பினர்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கும் மற்றும் மக்களவையும் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Rajya Sabha ,Speaker , Rajya Sabha, Members, Suspend, Speaker, Notification
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...