செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்தை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்து.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலை படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமைமிக்கது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் பல நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டுமெனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்றைய நாளிதழில் கூட பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: