×

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. நாளை 29.072022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.07.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை, சேலம், கரூர், நாமக்கல், விருதுநகர், மதுரை ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 31.07.2022-ல் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. கரூர், நாமக்கல், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 1ம் தேதி பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை ஆகிய 5 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 31, ஆகஸ்ட் 1 தேதிகளில் குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீசும் என்பதால் மீனவர்களுக்கு அன்றைய தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Inspection Centre , Tamil Nadu, Nilgiris, Coimbatore, Kanamaha, Chennai, Meteorological Centre
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து