வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டுக்கு 4 முறை வாய்ப்பு வழங்கப்படும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்ட தொடரின்போது ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியயலில் தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கு ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல் 4 முறை தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியயலில் சேர்ப்பதற்கான வழிவகையை அந்த மசோதாவில் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 18 வயது நிரம்பிய நபர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம், ஆனால் அதற்கு முன்னதாகவே அவருக்கு 18 வயது பூர்த்தியடைந்துவிட்டாலோ, அதற்க்கு இடையிலே தேர்தல் வந்துவிட்டாலோ அவருடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாத சூழல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 4 முறை பெயரை பதிவு செய்வதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.

அதன்படி ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமல்லாமல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் றுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: