தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி

கோவை:  கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான புளூ பேண்ட் எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2-ம் சுற்று கோவையில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்திய முழுவதும் இருந்து மொத்தம் 8 அணிகள் சார்பில் 54 கார்கள் பங்கேற்கிறது. ராலி சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் என இரு பிரிவுகளில் போட்டி நடக்கிறது. நாளை வாகனங்களின் பரிசோதனை மற்றும் கொடியசைத்து வைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது.

போட்டியை, கோவை ஜென்னிஸ் ரெசிடென்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின்னர், போட்டிகள் 30, 31 ஆகிய தேதிகளில் வெள்ளலூர் ஜி-ஸ்கொயர் சிட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலை மற்றும் கோவையை அடுத்த கேத்தனூர் பகுதியில் உள்ள காற்றாலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையில் நடக்கிறது. போட்டிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அளவிலான பரிசு தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2024 வரை நடக்க உள்ள எப்எம்எஸ்சிஐ சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ புரோமொடேராக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் சாம்பியன்ஷிப் சுற்று கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிலையில், இரண்டாம் சுற்று கோவையில் நடக்கிறது. அடுத்தடுத்து சுற்றுகளில் பெங்களூரு மற்றும் நாகாலாந்தில் நடக்க உள்ளது. மேலும், கோவையில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியை பொதுமக்கள், பந்தய பிரியர்கள் இலவசமாக நேரில் பார்த்து ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: