×

சிவகாசி மாநகராட்சியாக மாறிய பிறகும் மாற்றப்படாத பெயர் பலகைகள்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

சிவகாசி:சிவகாசி மாநகராட்சியாக மாறிய பிறகும் பெரும்பாலான பெயர் பலகைகள் மாற்றப்படாமல் நகராட்சி என்றே உள்ளது. இதனை மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்றாலே, சிவகாசி தான், நினைவுக்கு வரும்; இதை, ‘குட்டி ஜப்பான்’ என்பர். இந்த பெயரில் முதலில் அழைத்தவர், நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருதான். தீப்பெட்டி தயாரிப்பு, அச்சுத் தொழில், பட்டாசு தயாரிப்பு என, பம்பரமாக சுழல்கிறது சிவகாசி நகரம்.  பெருமை இந்த சிவகாசி நகரம் கடந்த ஆண்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.  சிவகாசி நகராட்சியோடு திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அரசாணை வெளியிடப்பட்டது.  

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஏறத்தாழ 11 மாதங்கள் ஆக போகிறது. ஆனாலும் இன்று வரை திருத்தங்கல் நகராட்சியில் பல்வேறு பெயர் பலகையில் நகராட்சி அகற்றப்பட்டு மாநகராட்சி என மாற்றாமல் உள்ளனர். வரவேற்பு பெயர் பலகைகள் துப்பரவு வாகனங்கள் என பல்வேறு பெயர் பலகைகள் மாற்றப்படாமல் திருத்தங்கல் நகராட்சி என்றே உள்ளன. இதனால் திருத்தங்கல் மக்களுக்கு நகராட்சி என்ற மனநிலையை இருந்து வருகின்றது.  பெயர் பலகைகளை மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்தங்கல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi Corporation , Name boards not changed even after Sivakasi becomes a corporation: Will authorities notice?
× RELATED சிவகாசி மாநகராட்சி மக்கள் வரவேற்பு;...